நோர்வூட் பிரதேச செயலகம் கால வரையரையின்றி பூட்டு!
கடும் மழை காரணமாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் மழை நீர் உட் புகுவதால் உடன் பூட்டு.
இன்று காலை முதல் கனத்த மழை காரணமாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் மழை நீர் உட் புகுவதால் காலவரை வரை இன்றி நோர்வூட் பிரதேச செயலகம் பூட்டு.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பணியாற்ற முடியாது என்று கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செயலக உட் பகுதியில் வெள்ள நீர் உட் புகுந்ததால் கழிவரை நிரம்பிய துர் நாற்றம் அடிப்பதாக பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது குறித்து நுவரெலியா மாவட்ட ஆட்சியர் துஷாரி தென்னகோன் அவர்களுக்கு அறிவித்து உள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.
What's Your Reaction?



