நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்.
நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்.
இன்று நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள் 11 மணி முதல் 12.30 மணி வரை நடத்தினார்கள்.
போராட்டகாரர்கள் தற்போது உள்ள அரசாங்கத்தின் பணிப்புரை களை தற்போது உள்ள நுவரெலியா மாவட்ட ஆணையாளர் கணக்கெடுப்பது இல்லை அரசுக்கு எதிராக செயல் பட்டு வருகிறார்.அதன் காரணமாக நகரில் எந்த ஒரு அபிவிருத்தியும் இல்லை.
இன்றைய அரசு நுவரெலியா நகருக்கு பாரிய அபிவிருத்தி செய்ய முன் வந்த போதும் தற்போது உள்ள ஆணையாளர் செய்ய மறுத்து வருகிறார் அவரை உடனடியாக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டம் நடத்தினர்.
மஸ்கெலியா நிருபர்.
What's Your Reaction?



