நாளை இலங்கை வருகிறார் நீலாம்பரி
நாளை இலங்கை வருகிறார் நீலாம்பரி!!
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் 04 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவர்கள் நாளை (அக்.15) இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி), மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் நேபாள பாதுகாப்புப் படையினர் இணைந்து நடத்திய விசேட கூட்டு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் ‘இஷாரா செவ்வந்தி’ கைது செய்யப்பட்டார்
‘கனேமுல்ல சஞ்சீவ’ எனப்படும் பாதாள உலக பிரமுகர் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ‘இஷாரா செவ்வந்தி’ என்ற பெண் சந்தேகநபர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் நேபாள பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?



