நாமல் தான் நாட்டை வழிநடத்த நல்ல தலைவர்-ஜோன்சன் பெனாண்டோ தெரிவிப்பு
நாமல் ராஜபக்ச அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த தலைவராக மாறியுள்ளார். இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர் அவர் என்பதையும் நாங்கள் காண்கிறோம். மகிந்த ராஜபக்சவை சந்திக்க செல்லும் போது அங்கு பெருமளவான மக்கள் இருக்கின்றார்கள். மக்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. சரியான நேரத்தில் எமது கட்சி சார்பில் நாங்கள் சரியான முடிவுகளை எடுப்போம். நாமல் ராஜபக்ச இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவர். நாமல் ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதியாக வருவார். கிராம மக்களும் கூட நாமல் ராஜபக்ச மீதுதான் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவருக்குத் தான் தேர்தலில் வாக்குகளை வழங்குவார்கள்.
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ -
What's Your Reaction?



