தென் ஆப்பிரிக்கா வீரரின் புதிய உலக சாதனை
தென்னாபிரிக்க வீரர் மெத்திவ் பிரீட்ஜ்கி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மெத்திவ் பிரீட்ஜ்கி தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50-க்கும் அதிகமான ஓட்டங்களை அடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க வீரர் மெத்திவ் பிரீட்ஜ்கி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதற்கு முன்பாக 1987-இல் இந்தியாவின் நவஜோத் சிங் சித்து தொடர்ச்சியாக 4 முறை 50-க்கும் அதிகமான ஓட்டங்களை அடித்தார். இந்நிலையில், தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது சரசரி 96.67-ஆக இருக்கிறது. இதில் 3 அரைசதங்கள், 1 சதம் அடங்கும்

What's Your Reaction?






