தலைகீழாக கவிழ்ந்த வாகனம்!
கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வேன் தலைகீழாக புரண்டு விபத்துள்ளானதாக தெரியவந்துள்ளது.
தெல்தோட்டை கிரேட்வெளி பெற்றோல் நிரப்பு நிலையம் முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகன சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது வாகனத்தில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?



