ஜப்பான் நிதி அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி!
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் நிதி அமைச்சர் கதோ கசுனொபுவிற்கும் இடையில் இன்று (29) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஜப்பான் உதவி/JICA ஒத்துழைப்பின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
What's Your Reaction?



