சில நிமிடங்களில் 10 லட்சம் ரூபாய் அபேஸ்!
அசகாய சூரர்கள் : சில நிமிடங்களில் 10 லட்சம் திருட்டு!!
பல்பொருள் அங்காடி ஒன்றில் 1.25 மில்லியன் ரூபா பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தம்பதியரை கைது செய்ய பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேருவளை, மஹகொட, பழைய வீதியைச் சேர்ந்த மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஸார் என்பவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர் மேலும் 03 ஊழியர்களுடன் மஹகொட, ஸாவியா வீதியில் பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்துவதாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
எனினும், போயா தினத்தன்று (அக். 06) அவர்களில் எவரும் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால், அன்றைய தினம் அவர் தனியாக பணிபுரிந்துள்ளார்.
முறைப்பாட்டில், பிற்பகல் 1.20 மணியளவில், சிறு குழந்தையுடன் ஒருவர் வந்து, ஒவ்வொன்றும் 02 கிலோகிராம் எடையுள்ள 05 அரிசிப் பொதிகளைக் கேட்டதாகவும், அவரது மனைவி என நம்பப்படும் பெண் ஒருவர், ஒவ்வொன்றிலும் 15 முட்டைகள் அடங்கிய 05 முட்டைப் பொட்டலங்களைக் கேட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைகளை பேக் செய்த பின்னர், இருவரும் காணாமல் போனதை புகார்தாரர் கவனித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தத் தம்பதியினர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன், காசாளர் கவுண்டர் அருகே பிளாஸ்டிக் கொள்கலனில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.25 மில்லியனைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
What's Your Reaction?



