கொழும்பில் மோதிக் கொள்ளும் இந்தியா-பாகிஸ்தான்
13 ஆவது மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கை குலுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மகளிர் உலக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கிரிக்கெட்டின் அனைத்து விதிமுறைகள் இந்தப்போட்டியின் போது முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் கை குலுக்குதல் அல்லது வீராங்கனைகள் சகஜமாகப் பேசிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?



