காசா போர் நிறுத்தத்தை நிராகரித்தது அமெரிக்கா
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட பிரேரணையை அமெரிக்கா Vetoes நிராகரித்தது. இன்றைய (18) போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு அமெரிக்கா. அது கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் என்பதால், வாக்கெடுப்பு என்பது தீர்மானம் நிராகரிக்கப்பட்டதைக் குறிக்கிறது. காசாவில் போர் நிறுத்தம் செய்யக் கோரும் வரைவுத் தீர்மானத்தை வாஷிங்டன் எதிர்ப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் டோரதி ஷியா இதன்போது குறிப்பிட்டார்.20 வருடங்களாக செப்பனிட படாமல் இருக்கும் காட்மோர் வீதி செப்பனிடும் பணி ஆரம்பம்.
இந் நிகழ்வு நேற்று 18 ம் திகதி நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணண் கலைச் செல்வி ஆரம்பித்து வைத்தார்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமி மலை மல்லிப்பூ சந்தியில் இருந்து காட்மோர் செல்லும் மதிய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான வீதி மொக்கா கருமாரியம்மன் ஆலய பகுதியில் இருந்து சுமார் 1.25 கிலோமீட்டர் பகுதி காபட் செய்யும் பணி இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணண் கலைச் செல்வி ஆரம்பித்து வைத்தார் இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் மொக்கா காட்மோர் தோட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலை திட்டம் நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற் கொள்ளும் எனவும் எஞ்சிய பகுதியை இரண்டாம் கட்டமாக காபட் செய்ய படும் என பாராளுமன்ற உறுப்பினர் கிட்னண் கலைச்செல்வி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்
What's Your Reaction?



