காங்கேசன்துறை நாகப்பட்டினம் கப்பல் சேவை இனி வாரம் முழுவதும் இயங்கும்!!

SaiSai
Oct 10, 2025 - 14:50
Oct 10, 2025 - 14:50
 0  19
காங்கேசன்துறை  நாகப்பட்டினம் கப்பல் சேவை இனி வாரம் முழுவதும் இயங்கும்!!

" தாலாட்டுதே வானம்..தள்ளாடுதே மேகம்" 

கடல் பயணங்கள் :

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை இப்போது வாரம் முழுவதும் இயங்கும்..!

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வாரத்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் செவ்வாய் தவிர்ந்த ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதிமுதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரை தினமும் கப்பல் சேவை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளது.

By: TN

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow