ஐஸ் போதை பொருள் கடத்திய 21வயது இளைஞனுக்கு பத்து ஆண்டுகள் கடுஊழிய சிறை!

SaiSai
Oct 10, 2025 - 14:37
 0  22
ஐஸ் போதை பொருள் கடத்திய 21வயது இளைஞனுக்கு பத்து ஆண்டுகள் கடுஊழிய சிறை!

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் எடுத்து சென்ற போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் இளைஞருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் குறித்த இளைஞன் மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow