உந்துருளி மோதி பாடசாலை மாணவி படுகாயம்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 8 ல் கல்வி பயிலும் 13 வயது மாணவிக்கு ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த மாணவியை அதே பாடசாலையில் உள்ள ஆசிரியைகள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதித்து உள்ளனர். படுகாயம் அடைந்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
What's Your Reaction?



