இலங்கை ஐயப்ப பக்தர்களின் 50 வருட கனவு நிறைவேறியது!

SaiSai
Nov 13, 2025 - 17:01
Nov 13, 2025 - 17:29
 0  40
இலங்கை ஐயப்ப பக்தர்களின் 50 வருட கனவு நிறைவேறியது!

ஐம்பது வருட கால கனவு நனவானது......????

-----------------------

ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கையினை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க .

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெற்றதுடன். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம்(13) அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது உலக வாழ் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாவதோடு, இலங்கை, ஐயப்பன் யாத்திரையனை புனித யாத்திரையாக பிரகனப்படுத்திய ஒரே நாடு என்று பெருமையினையும் பெற்றுள்ளது.

இப் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை யதார்த்தமாக்க... ஆரம்பம் முதல் அயராது உழைத்த இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் சகல ஐயப்ப குரு சுவாமிமார்கள் உட்பட சகல சுவாமிமார்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow